மதீஷ பத்திரணவை நாமே உருவாக்கினோம் -கூறுகிறது இலங்கை கிரிக்கெட் சபை-

ஆசிரியர் - Editor II
மதீஷ பத்திரணவை நாமே உருவாக்கினோம் -கூறுகிறது இலங்கை கிரிக்கெட் சபை-

மதீஷ பத்திரணவின் முன்னேற்றத்தில் தோனியும், சென்னை சுப்பர் கிங்ஸும் பங்காற்றி இருக்கக்கூடும். ஆனால், ஸ்ரீலங்கா கிரிக்கெட்தான் பத்திரணவை முதன்முதலில் உருவாக்கியது என இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுநர் நவீத் நவாஸ் கூறினார்.

ஆர்.பிரேமதாச விளையாட்டரங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

19 வயதுக்குட்பட்ட இரண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடியவர் மதீஷ பத்திரண. பாடசாலை கிரக்கெட் விளையாடியபோதே மதீஷ பத்திரணவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இனங்கண்டிருந்தது. அத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அபிவிருத்தித் திட்டத்திலும் அவர் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார் என நவீத் நவாஸ் குறிப்பிட்டார்.

'உண்மையில் பத்திரணவுக்கு இளம் வயதில் - 18, 19 வயதுகளில் ஐ.பி.எல்,லில் தோனி போன்ற தலைவரின் கீழ் விளையாட கிடைத்த வாய்ப்பு அவரை ஒரு சிறந்த வீரராக முன்னேறுவதற்கு உதவி இருக்கலாம். எம்.எஸ்.ஸிடமிருந்து அவர் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டிருக்கக்கூடும்.

அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது, மிக முக்கிய போட்டிகளில் எவ்வாறு திறமையை வெளிப்படுத்துவது என்பதை எல்லாம் சென்னைக்காக விளையாடியபோது அவர் கற்றிருக்கக்கூடும். அது அவருக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.

ஆனால் அதன் மூலம்தான் அவர் முன்னேற்றம் அடைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார் என நான் கூறமாட்டேன். ஏனேனில் அவர் இளம் வயதிலேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் இனங்காணப்பட்டவர்.

இருப்பினும் ஐ.பி.எல்,லில் அவர் விளையாடியதால் அவரது முன்னேற்றத்தில் எம்.எஸ்.தோனிக்கு பங்கு உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன் என நவீத் நவாஸ் குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு