இலங்கை கடலில் உள்ள மீன் வளம் மற்றும் உயிா் வகைகள் குறித்த ஆராய்ச்சிக்காக நோா்வே நாட்டிக் கப்பல் காங்கேசன்துறைக்கு வந்துள்ளது..
இலங்கை கடற்பகுதியில் எந்தவகையான உயிரினங்கள் , அதில் எவ்வளவு மீன்கள் மற்றும் கடல் உணவு வகைகள் என்பன உள்ளன என்பதனைக் கண்டறியும் நோர்வே நாட்டுக் கப்பல் நேற்றைய தினம் காங்கேசன்துறையில் இருந்து தனது பணியை ஆரம்பித்தது.
இலங்கைத் தீவைச் சூழ கானப்படும் கடல்வாழ் உயிரினங்களில் அரிய வகையான உயிரிணங்கள் , மற்றும் அதி உச்ச விலை வகையை சார்ந்த உயிரிணங்கள் என்பவற்றோடு அன்றாட உணவிற்கான சாதாரண உயிரணிங்களில்
எத்தனை வகையான உயிரிணங்கள் கானப்படுகின்றன. இவ்வாறு கானப்படும் ஒவ்வொரு இனங்களிலும் எவ்வளவு தொகையில் கானப்படுகின்றன. என்பதனையும் கண்டறிவதோடு எப்பகுதியில் அதிகமாக கானப்படுகின்றது என்பதனையும் இனம் கான முடியும்.
குறித்த பணியினை நாரா நிறுவன ஏற்பாட்டில் முன்கொண்டு செல்லும் நோர்வே நாட்டு நிறுவனத்தினால் அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய நவீன கப்பல் நோர்வே நாட்டில் இருந்து எடுத்து வரப்பட்டிருந்த்து. இவ்வாறு எடுத்துவரப்பட்ட கப்பல் நேற்று முதல் 26 தினங்கள் குறித்த பணியில் ஈடுபடும்.
குறித்த பணியின் நிறைவில் நோர்வே நிறுவனம் நாரா நிறுவனத்திற்கு அதன் பெறுபேற்று அறிக்கையினை கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.