யாழ்.ஊரெழு பகுதியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஐனாதிபதியாக தேர்வு..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழு பகுதியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஐனாதிபதியாக தேர்வு..

யாழ்.ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான  வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும் துணை பாதுகாப்பு அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு போட்டியாக  ஜனாதிபதி வேட்பாளராக இருவர் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 வீத வாக்குகளை கூட பெறாத நிலை காணப்பட்டது.

இவரது தாய் யாழ்ப்பாண ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு