நிலவில் உள்ள லேண்டரை படம்பிடித்து அனுப்பிய பிரக்யான் ரோவர்

ஆசிரியர் - Editor II
நிலவில் உள்ள லேண்டரை படம்பிடித்து அனுப்பிய பிரக்யான் ரோவர்

நிலாவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து கொண்டே விக்ரம் லேண்டரை படம்பிடித்து பிரக்யான் ரோவர் அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ரொக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.

அதன்படி, கடந்த 23 ஆம் திகதி சந்திரயான்-3 விண்கத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

பின்னர், சில மணி நேரங்களுக்கு அடுத்து லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் நிலவில் தரையிறங்கப்பட்டது. அதற்கான வீடியோவும் இஸ்ரோ வெளியிட்டது.

அதன்படி, நிலவின் மண்ணில் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வு செய்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து, நிலவின் மேற்பரப்பில் இருந்த 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை முன்கூட்டியே அறிந்த ரோவர் அதனை தவிர்த்து சமதள பாதையில் சென்றது.

இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் இருந்து லேண்டர் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட chaSTE, ILSA ஆகிய கருவிகளின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

அதாவது, பிரக்யான் ரோவர் இன்று புதன்கிழமை ஆய்வு செய்து கொண்டே, விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படமானது ரோவரில் (NavCam) உள்ள நேவிகேஷன் கேமராவால் எடுக்கப்பட்டது.

இதில், chaSTE என்பது நிலப்பரப்பின் வெப்பநிலையை கணக்கிடும் கருவி ஆகும். ILSA என்பது கனிமங்களின் தன்மை மற்றும் அங்கு ஏற்படும் அதிர்வுகளை கண்டறியும் கருவி ஆகும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு