யொலி லெஜண்டஸ் லீக்!! -அபார வெற்றியுடன் கிண்ணத்தை தனதாக்கியது YMHA அணி-

ஆசிரியர் - Editor II
யொலி லெஜண்டஸ் லீக்!! -அபார வெற்றியுடன் கிண்ணத்தை தனதாக்கியது YMHA அணி-

யாழ்ப்பாணம் யொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம் தனது 75 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்திய 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான யொலி லெஜண்டஸ் லீக் ( jolly legends league) ரி-20 கிரிக்கட் சுற்று போட்டியின் இறுதிப் போட்டி கடந்த 27.08.2023ம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

யொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் திரு சாந்திரட்ணம் ஜெயபிரகாஸ் மற்றும் துரைராஜா பிரபாகரன் (சுல்தான்) ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

இறுதிப்போட்டியில் ஸ்ரான்லி விளையாட்டு கழகத்தை எதிர்த்து YMHA விளையாட்டு கழகம் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய YMHA அணி 20 பந்துப் பரிமாற்றங்களில் 217 ஓட்டங்களை பெற்றது இதில் அருள்ராஜ் 110 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ரான்லி அணி 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 68 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக YMHA வீரர் அருள்ராஜ் உம் ஆட்ட தொடர் நாயகனாக சென்றலைட்ஸ் அணி வீரர் சாயிதர்சனும் தெரிவாகினர். 

இறுதிப் போட்டியில் பசுமைப் புரட்சியை நோக்காக கொண்டு வீரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

இறுதி போட்டியில் யொலிஸ்ரார்ஸ் விளையாட்டு கழகத்தால் யாழ்.இந்துக் கல்லூரிக்கு துடுப்பு மட்டையும் ஸ்கோர் போர்ட் உம் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு