பெண்கள் 5 நாட்கள் நிர்வாணமாக இருக்க வேண்டும்!! -இந்திய கிராமம் ஒன்றில் இன்றும் இருக்கும் நடைமுறை-
உலகில் பல் வேறு நாடுகளில் தற்போதைய நவீன காலத்திலும் கூட வெவ்வேறு விசித்திரமான கலாச்சாரங்கள் நிகழ்ந்துக்கொண்டே தான் இருகின்றது.
அந்தவகையில் தான் இந்தியாவில் ஹிமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள பினி கிராமத்தில் மழைக்காலத்தில் நடத்தப்படும் ஒரு திருவிழாவில் பெண்கள் ஆடை இல்லாமல் இருக்க வேண்டுமாம்.
அக்கிராமத்தில் மழைக்காலத்தில் நடத்தப்படும் திருவிழாவில் ஒரு விதிமுறையின் அடிப்படையில் நடத்தப்படும். இந்த திருவிழாவானது தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும்.
பத்ராப் மாதத்தின் முதல் நாளில் லாஹு கோண்ட் தெய்வம் ஒரு அரக்கனை வென்ற தருணத்தை நினைவுகூரும் வகையில் இந்த கிராமத்தில் இந்த திருவிழா நடத்தப்படுகின்றது.
இதில் பெண்கள் 5 நாட்களும் ஆடை அணியக் கூடாது. மேலும் இந்த 5 நாட்களும் சிரிக்கவே கூடாது. இந்த 5 நாட்களும் முற்றிலும் நிர்வாணமாக ஆண்களுக்கு முன்னால் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே பூட்டிக் கொண்டு இருப்பார்கள்.
கிராமத்தில் உள்ள சில இளைய தலைமுறை பெண்கள் பாரம்பரியத்தை மாற்றியமைத்து மெல்லிய ஆடையை அணிகின்றார்கள். அவ்வாறு செய்யும் பெண்கள் ஒரு சில நாட்களில் மோசமான செய்திகளை கேட்க நேரிடும்.
மேலும் எந்ந காரணத்தைக்கொண்டும் கணவன் மற்றும் மனைவி உரையாடலில் ஈடுப்படவே கூடாது.
ஆண்கள் மது அல்லது இறைச்சி சாப்பிட அனுமதிக்கப்படுவதில்லை. பாரம்பரியத்தை முறையாகக் கடைப்பிடிக்கத் தவறினால், தெய்வங்களுக்கு கோபம் ஏற்படும். அது தீங்கு விளைவிக்கும் என்று நம்பப்படுகிறது.