SuperTopAds

இரு பணிகளை முடித்த சந்திரயான்!! அறிவியல் பரிசோதனைகளில் தீவிரம்: இஸ்ரோ தகவல்

ஆசிரியர் - Editor II
இரு பணிகளை முடித்த சந்திரயான்!! அறிவியல் பரிசோதனைகளில் தீவிரம்: இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 திட்டத்தில் முக்கியமான 2 பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டதாகவும், தொடர்ந்து அறிவியல் பரிசோதனைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக இஸ்ரோ உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலம், கடந்த 23 ஆம் திகதி வெற்றிகரமாக தரையிறங்கிய சில மணி நேரங்களுக்கு பின் லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் பத்திரமாக நிலவின் தரைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

நிலவின் மேற்பரப்பு கரடு, முரடாக இருப்பதால் ரோவர் மிகவும் அவதானமாக நகர்ந்து ரோவர்  ஆய்வை முன்னெடுக்கிறது. அதிலுள்ள லிப்ஸ் மற்றும் ஏபிஎக்ஸ்எஸ் சாதனங்களின் ஆய்வுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் லிப்ஸ் கருவி மூலம் நிலவின் தரைப்பகுதிகளில் ஆல்பா கதிர்கள் மூலம் துளையிட்டு அலுமினியம் போன்ற தாதுக்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மறுபுறம் லேண்டரில் உள்ள ராம்பா, இல்சா, சாஸ்டே ஆகிய கருவிகளும் நிலவில் பரிசோதனைகளை செய்து முக்கிய தரவுகளை சேகரித்து புவிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிலவின் தோற்றம், அதன் நீராதாரம், வெப்பம், நில அதிர்வுகள், அயனிகள், கனிம வளங்கள் உட்பட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.