SuperTopAds

நிலாவில் மாஸாக தரையிறங்கும் சந்திரயான்-3 -மாலை 6.04 மணிக்கு நேரலையில் பார்க்கலாம்-

ஆசிரியர் - Editor II
நிலாவில் மாஸாக தரையிறங்கும் சந்திரயான்-3 -மாலை 6.04 மணிக்கு நேரலையில் பார்க்கலாம்-

இலங்கை நேரப்படி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-3 தொடர்பான தகவல்களை உடனடியாக அறிந்துக்கொள்ள இஸ்ரோ தனது Youtube பக்கத்தில் நேரலை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.   

இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஓகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்வதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் தரையிறங்கவுள்ளது. இது வெற்றியை ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கையில் உலக மக்கள் காத்து இருக்கிறார்கள்.

இதை உலக மக்கள் நேரலையாக காண விரும்புவதால் இஸ்ரோ ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஆகவே இதை நேரலையாக பார்க்க விரும்புவர்கள் இந்த வீடியோவின் மூலம் பார்த்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.