கிளிநொச்சி குமாரசுவாமிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்தி அதிகாிப்பு மக்கள் விசனம்..

கிளிநொச்சி குமாரசுவாமிபுரம் பகுதியில் பாடசாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுவதனால் பல்வேறு அசெகளரிங்களை எதிர்கொள்வதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள குமாரசுவாமிபுரம் கிராமத்தில் பாடசாலையினை அண்மித்த பகுதியிலும் பாடசாலை அருகில் குடியிருப்புக்கள் அற்றுக்காணப்படும் காணிகளிலும் சட்டவிரோத கசிப்பு விற்பனை அதிகரித்துக் காணப்படுவதாகவும்
இதனால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரிங்;களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை மேற்படி கிராமத்தில் சட்டவிரோத கசிப்பு விற்பனை உற்பத்திகள் அதிகரித்துக் காணப்படுவதுடன்
புதிய புதிய நபர்;களின் நடமாட்டங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்றுமஇதனால் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள் இவ்வாறான மது உற்பத்;திவிற்பனைகளால் இளைஞர்கள் மதுப்பழக்;கத்திற்கு அடிமையாகுதல் இளைஞர்களுடைக்கிடையே
மோதல்கள் முரண்பாடுகள் என்பன அதிகரித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதனைக்கடடுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் அக்கறை காட்டுவதில்லை என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.