வரதட்சணை கேட்ட இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்! அப்படி என்ன கேட்டார்???
ஒடிசாவில், பள்ளி ஆசிரியர் ஒருவர் வரதட்சணை கேட்டதற்காக அனைவராலும் பாராட்டப்பட்டுவருகிறார். நம்ப முடியவில்லை அல்லவா? அவர் வரதட்சணையாகக் கேட்டது பணம், பொருளை அல்ல… மரக்கன்றுகளை!
ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டத்தில் உள்ள பாலபத்ரபூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர், சரோஜ் காந்த் பிஸ்வால். இவர், அதே கிராமத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவருக்கும் ரேஷ்மி ரேகா என்ற ஆசிரியைக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது ரேஷ்மியின் பெற்றோர்களிடம் சரோஜ், எனக்கு வரதட்சணையாக 1,000 மரக்கன்றுகள் வேண்டும். என் திருமணத்தின் அடையாளமாக என் கிராமத்தில் அவற்றை நட்டுவைக்கிறேன்’ என்றார்.
அதைக்கேட்ட பெண் வீட்டாருக்கு இன்பம் கலந்த அதிர்ச்சி. அதே சமயம், மணமகன் தரப்பில் பலத்த எதிர்ப்பு. சரோஜ் அனைவரையும் சமாதானப்படுத்தினார்.