புகையிலை செய்கையை நிறுத்துவதாக இருந்தால் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றின் இறக்குமதியை நிறுத்துங்கள்..

ஆசிரியர் - Editor I
புகையிலை செய்கையை நிறுத்துவதாக இருந்தால் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றின் இறக்குமதியை நிறுத்துங்கள்..

யாழ்.மாவட்டத்தில் புகையிலை செய்கையை நிறுத்துவதாக இருந்தால் அரசாங்கம் வெங்காய ம் மற்றும் மிளகாயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அரசுக்கு நிபந்தனை விதிப்பதாக வடமாகாணசபையில் தீர்மானிக்கப்பட்டது. 

வடமாகாணசபையின் 125வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது புகையிலை செய்கையை 2020ம் ஆண்டு நிறுத்தப்போவதாக மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், 

புகையிலை செய்கைக்கு மாற்றீடாக வேறு பயிர்களை செய்வது தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் பிரேரணை ஒன்றை சபைக்கு கொண்டுவந்திருந்தார். மேற்படிப் பிரேரணை மீதான விவாதத்தின்போது புகையிலை செய்கைக்கு 

மாற்றீடாக வேறு பயிர்களான வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியன அதிக இலாபம் தரக்கூடியது என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்ததுடன், அதிகளவு வெங்காயம் மற்றும் மிளகாய் உற்பத்தி செய்யப்படும்போது அரசாங்கம் அவற்றை வெளிநாடுகளில் 

இருந்து இறக்குமதி செய்வதால் எமது விவசாயிகளுக்கு உரிய இலாபம் கிடைப்பதில்லை. என சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கமைய வெங்காயம் மற்றும் மிளகாய் உற்பத்தி செய்யப்படும் ப ருவ காலங்களை அடையாளப்படுத்தி தருமாறு

கோரிய வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், அந்த பருவ காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் மற்றும் மிளகாய் இறக்குமதி செய்வதை அரசு நிறுத்தவேண்டும் என அரசாங்கத்தை கோருவதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு