மணிப்பூர் பாலியல் கொடூரம்!! அந்த கும்பலிடம் எங்களைப் பிடித்துக் கொடுத்ததே போலீஸ்தான் - பாதிக்கப்பட்ட பெண்-

ஆசிரியர் - Editor II
மணிப்பூர் பாலியல் கொடூரம்!! அந்த கும்பலிடம் எங்களைப் பிடித்துக் கொடுத்ததே போலீஸ்தான் - பாதிக்கப்பட்ட பெண்-

மணிப்பூரில் ஆண்கள் கும்பலால் ஒன்று இரு பெண்கள் நிர்வாணமாக வீதியில் இளுத்துச் சென்று, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ‘பொலிஸார்தான் தங்களை அந்த கும்பலிடம் பிடித்துக் கொடுத்தனர்’ என்று பாதிக்கப்பட்ட இரு பெண்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அப் பெண்கள் தெரிவிக்கையில்:-

கொலைவெறியுடன் எங்கள் கிராமத்துக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அந்த கும்பலில் பொலிஸாரும் இருந்தார்கள். அவர்கள்தான் எங்களை அந்த கும்பலிடம் பிடித்துக் கொடுத்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூரின் கங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் என்ற கிராமத்தில் வாழும் குகி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பெண்கள். இவர்களில் 20 வயதுக்கு மேற்ப்பட்ட ஒருவரும், 40 வயதுக்கு மேற்ப்பட்ட ஒருவரும் அடங்குகின்றனர்.

மைதேயி சமூகத்தவர்களை பழங்குடி பட்டியல் சமூகத்தவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை எதிர்த்து குகி பழங்குடி மக்கள் சார்பில் மே 3 ஆம் திகதி மாபெரும் பேரணி நடைபெற்றதை அடுத்து, மே 4 ஆம் திகதி பி பைனோம் கிராமத்துக்குள் நுழைந்த மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், அங்கு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரின் தந்தையும் சகோதரரும் அந்த கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதையடுத்து, அந்த கும்பல் இரண்டு பெண்களையும் நிர்வாணப்படுத்தி வயல்வெளிக்கு இழுத்துச் சென்று அங்கு, பாலியல் வன்புணர்வுக்கு உடபடுத்தினர்.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மே 18 ஆம் திகதி, தவுபால் மாவட்டத்தில் உள்ள நோங்பேர் செக்மாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதையடுத்து, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் மே 19 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரு பெண்கள் நிர்வாணமாக இட்டுச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு பொலிஸாரே காரணமாக இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதோடு, மே 4 ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவம், வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதன் பின்னணியில் பொலிஸாருக்கு பங்கு குறித்த கேள்வியும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனிடையே, மணிப்பூரில் குகி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றவர்களில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு