இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி

ஆசிரியர் - Editor II
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 இலக்குகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வந்தது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 312 ஓட்டங்களும், பாகிஸ்தான் அணி 461 ஓட்டங்களும் குவித்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை 279 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா 82 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பாகிஸ்தான் தரப்பில் அபரர் அகமது, நோமன் அலி தலா 3 இலக்குகளை கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து 131 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது.

இன்றைய இறுதி நாள் ஆட்டத்தில், பாபர் ஆசம் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார், ஷாகீல் 30 ஓட்டங்களில் வெளியேறினார்.

இமாம்-உல்-ஹாக் 50 ஓட்டங்களை கடந்து நிலைத்து நின்று ஆட 6 இலக்குகளை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது, 4 இலக்குகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்.

இவ்விரு அணிகளுக்கான 2 ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பில் 24 ஆம் திகதி தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு