வடமாகாணசபையின் ஒப்புதல் இல்லாமல் வடமாகாணத்தின் வளங்களை எவரும் சூறையாட இடமளிக்கப்படாது..

ஆசிரியர் - Editor
வடமாகாணசபையின் ஒப்புதல் இல்லாமல் வடமாகாணத்தின் வளங்களை எவரும் சூறையாட இடமளிக்கப்படாது..

வடமாகாணசபையின் ஒப்புதல் பெறாமல் வடமாகாணத்தில் உள்ள வளங்களை வேறு மாகாணங்கள் எடுக்க அனுமதிக்கப்படாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூ றியிருக்கும் நிலையில், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்மனைட் அகழ்வதனால் உண்டாகும் சாதக, பாதகங்கள் குறி த்து ஆராய்வதற்காக 17 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு விரைவில் ஆய்வுகளை நடாத்தவுள்ளது. 

கனிய வளங்கள் திணைக்கள அதிகாரிகள், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மாகா ணசபை உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முல்ஐ லத்தீவு மாவட்ட செயலர் உள்ளிட்டோர் கூடி 

இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்து ரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தனர். இந்த கலந்துரையாடலிலேயே மேற்பபடி குழு உருவாக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி தீர்மா னம் தொடர்பாகவும், கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், 

மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகையில், கனியவளங்கள் திணைக்களத்தினர் மாவட்டத்தில் நடாத்தும் 5வது கலந்துரையாடல் இன்று( நேற்று) நடைபெற்றது. இதில் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தோம். 

இதன்போது வடமாகாண எல்லைக்குள் உள்ள வளங்களை வேறு மாகாணத்தில் உள்ளவர்கள் எப்படி எடுக்க இயலும் என முதலமைச்சர் கேள்வி எழுப்பியதுடன், வடமாகாண சபையுடன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படாமல், 

மாகாணசபையின் அங்கீகாரம் பெறாமல் வளங்களை கொள்ளையிட எவருக்கும் அனுமதிக்க இயலாது என சுட்டிக்காட்டிய முதலமைச்சர் வடமாகாண எல்லைக்குள் இருந்து வளங்களை வெளியிடங்களுக்கு எடுத்து செல்வதாக இருந்தால் 

அது தொடர்பாக மாகாணசபையுடன் பேசப்படவேண்டும். மேலும் மாகாண எல்லைக்குள் ளிருந்து எடுக்கப்படும் வளங்களினால் பெறப்படும் வருமான த்தில் எமக்கும் பங்கிருக்க வேண்டும். என கூறியிருந்தார். 

இதனை தொடர்ந்து நாம் கூறுகையில் கொக்கிளாய் தொடக்கம் கொக்கு தொடுவாய் வரையிலான மிக நீண்ட தூரத்திற்கு கனிய மணல் அகழப்படவுள்ளது. இதனால் எமது மக்களுக்கு பாதிப்புக்கள் உண்டாகும். 

அதேபோல் எமது பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என என்ன உத்தரவாதம் உள்ளது? என கேள்வி எழுப்பியதுடன், கனியமணல் அகழ்வினால் எமது சுற்றுசூழல் பாதிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் 

எனவும் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து வடமாகாணசபை சார்பில் 7 பேரும், கனிய வளங்கள் திணைக்களம் சார்பில் 5 பேரும், மாவட்ட செயலகம் சார்பில் 3 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை சார்பில் 2 பேருமாக சேர்த்து 17 பேர் கொண்ட குழுவை 

உருவாக்குவதெனவும், அந்த குழு கனிய மணல் அகழ்வினால் உண்டாகும் பாதிப்புக்கள் தொடர் பாகவும், கனிய மணல் அகழப்பட்டால் அதிலிருந்து பெறப்படும் வருமானத்தில் வடமாகாணத் திற்கு கிடைக்கும் பங்கு என்ன என்பது தொடர்பாகவும், 

வேலைவாய்ப்புக்கள் தொடர்பாகவும் ஆராயவுள்ளது.