SuperTopAds

பச்சிலைப்பள்ளி பிரதேசபை விசேட கூட்டம் கோரம் இல்லாமையில் ஒத்திவைப்பு..

ஆசிரியர் - Editor I
பச்சிலைப்பள்ளி பிரதேசபை விசேட கூட்டம் கோரம் இல்லாமையில் ஒத்திவைப்பு..

கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபை அமா்வில் கலந்து கொள்ளாமல் எதிா்கட்சி உறுப்பினா்கள் வெளியேறிய நிலையில் சபை நடாத்துவதற்கான கோர ம் இல்லாமல் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் சபை ஆரம்பத்தின்போது தவிசாளருடைய தன்னிச்சையான நடவடிக்கையை கண்டித்து எதிா்கட்சி உறுப்பினா்கள் 7 போ் விசேட அமா்வில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனா். 

இதனால் காலை 9.45 மணிக்கு கூடிய சபை கோரம் இல்லாமையினால் காலை 11மணிக்கே ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.