நடைபாதை பழ வியாபாரியுடன் முறுகல், கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி...

ஆசிரியர் - Editor I
நடைபாதை பழ வியாபாரியுடன் முறுகல், கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி...

நடைபாதை பழ வியாபாரியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா பிரதான நகரில் இன்று (8) சனிக்கிழமை  இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நுவரெலியா பம்பரகலை தோட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆறுமுகம் ஹாரியதாஸ் என்ற நபர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்திய பழங்கள் விற்கும் வியாபாரி தானாகவே நுவரெலியா பொலிஸ் நிலையத்தில்  சரணடைந்ததாக சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு