80 பந்தில் 140 ஓட்டங்கள் விளாசிய சமரி அதப்பத்து!! -அசுரவேக ஆட்டத்தால் தொடரை கைப்பற்றிய இலங்கை-

ஆசிரியர் - Editor II
80 பந்தில் 140 ஓட்டங்கள் விளாசிய சமரி அதப்பத்து!! -அசுரவேக ஆட்டத்தால் தொடரை கைப்பற்றிய இலங்கை-

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதப்பத்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 60 பந்துகளில் சதம் விளாசி அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி காலேவில் நடந்தது.

நியூசிலாந்து அணி 2 இலக்குகள் இழப்புக்கு 127 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மழை விட்டதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு DL விதிமுறைப்படி 196 ஓட்டங்கள் 29 பந்துப் பரிமாற்றங்களில் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

அதன்படி இலங்கை அணி களமிறங்கி ஆடியது. அதிக ஓட்டங்களை பெற வேண்டி இருந்ததால் இலங்கை அணியின் தலைவி சமரி அதப்பத்து அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார்.

சிக்ஸர் விளாசி தெறிக்கவிட்ட அவர், 60 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருக்கு 8 ஆவது ஒருநாள் சதம் ஆகும்.  

மொத்தம் 80 பந்துகளை எதிர்கொண்ட அவர், 9 சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 140 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். 

இதன்மூலம் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு