-அரியாலை கில்லாடிகள் 100 இன் இரண்டாவது பருவகால தொடர்- பரபரப்பான இறுதிப் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை தட்டி தூக்கிய காளி கிங்ஸ்

ஆசிரியர் - Editor II
-அரியாலை கில்லாடிகள் 100 இன் இரண்டாவது பருவகால தொடர்- பரபரப்பான இறுதிப் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை தட்டி தூக்கிய காளி கிங்ஸ்

அரியாலை கில்லாடிகள் 100, JZ தமிழுடன் இணைந்து நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் தொடரின் பிரமாண்டமான இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை நடந்தது.

அரியாலை சரஸ்வதி மைதானத்தில் நடந்த இவ்விறுதிப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமனாதன், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், கிருபா சாரதி பயிற்சி பாடசாலை அதிபர் ஏ.கிருபாகரன் போடியை ஆரம்பித்து வைத்தனர்.

காளி கிங்ஸ், இணுவில் யுனைட்டட் ஸ்டார் மோதிக் கொண்ட இப் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற காளி கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இணுவில் யுனைட்டட் ஸ்டார்  அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப் பரிமாற்றங்களில் 8  இலக்குகளை இழந்து  65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய காளி கிங்ஸ் அணியினர் பரபரப்பான இறுதி பந்துப் பரிமாற்றத்தில்  5 இலக்குகளை இழந்து 66 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இபோட்டியின் நாயகனாக காளி கிங்ஸ் அணியின் வீரர் அஜித் தெரிவானர். 

வெற்றி பெற்ற காளி கிங்ஸ் அணிக்கான வெற்றிக் கிண்ணத் JZ தமிழ் குழுத்தினரான, ஆர்.சாய்றாம், ஜி.கிஸோர், ரி.கர்சன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர். 

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு