-தீக்ஷனா, ஹசரங்க சுழல் மாயம்- ஸ்கொட்லாந்தை இலகுவாக வீழ்த்தியது இலங்கை

ஆசிரியர் - Editor II
-தீக்ஷனா, ஹசரங்க சுழல் மாயம்- ஸ்கொட்லாந்தை இலகுவாக வீழ்த்தியது இலங்கை

பத்தும் நிஸ்ஸன்கவின் ஆபாராமான துடுப்பாட்டம் மற்றும் தீக்ஷனா, ஹசரங்க ஆகியோரின் சிற்பபான பந்துவீச்சின் உதவியுடன் ஸ்கொட்லாந்து அணியை 82 ஓட்டங்களால் இலகுவாக வீழ்த்தியது இலங்கை அணி.

புலாவாயோ குவீன்ஸ் பார்க் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஸ்கொட்லாந்துடனான ஐ.சி.சி உலகக் கிண்ண தகுதிகாண் பி குழு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 49.3 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த தகுதிகாண் சுற்றில் இலங்கை முதல் தடவையாக துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களின் பலனாகவே இலங்கை கௌரமான நிலையை அடைந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க (75), சரித் அசலன்க (63), சதீர சமரவிக்ரம (26), தனஞ்சய டி சில்வா (23) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

ஸ்கொட்லாந்து சார்பாக 8 ஆவது பந்துவீச்சாளராக பயன்படுத்தப்பட்ட 4 இலக்குகளையும், மார்க் வொட் 3 இலக்குகளையும், கிறிஸ் சோல் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 246 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஸ்கொட்லாந்து பதிலுக்கு துடப்பெடுத்தாடன களமிறங்கியது.

ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்ததை வெளிப்படுத்திய ஸ்கொட்லாந்து அணியினர், மகேஷ் தீக்ஷனா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோரின் சுழல் பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் தமது இலக்ககளை பறி கொடுத்தனர்.

ஸ்கொட்லாந்து அணி சார்பில் சிறப்பான துடப்பெடுத்தாடிய கிறிஸ் க்ரீவ்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று அணிக்காக 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இறுதியில் ஸ்கொட்லாந்து 29 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் பெறி கொடுத்து 163 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய மகேஷ் தீக்ஷனா 3 இலக்குகளை கைப்பற்றினார். இதுதவிர வனிந்து ஹசரங்க 2 இலக்ககளையும், கசுன் ராஜித, லஹிரு குமார, தசுன் ஷனக ஆகியோர் ஒவ்வொரு இலக்குகளையும் வீழ்த்தினர். இப் போட்டியின் ஆட்டநாயகனாக மகேஷ் தீக்ஷனா தெரிவானர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு