-ஐ.சி.சி உலகக் கோப்பை- பூமியில் இருந்து 1.20 இலட்சம் அடி உயரத்தில் வான்வெளியில் அறிமுகம்

ஆசிரியர் - Editor II
-ஐ.சி.சி உலகக் கோப்பை- பூமியில் இருந்து 1.20 இலட்சம் அடி உயரத்தில் வான்வெளியில் அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) 50 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

 இந்நிலையில் இந்தத் தொடருக்கான கோப்பை அறிமுக விழாவை வியக்க வைக்கும் வகையில் நடத்தி உள்ளது ஐசிசி.

டிராபி, பூமியிலிருந்து 1,20,000 அடி உயரத்தில் விண்வெளியில் வைத்து அறிமுகம் செய்துள்ளது ஐ.சி.சி. 

பெஸ்போக் ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூனில் இணைக்கப்பட்டு கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து, அந்த கோப்பையானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தரையிறங்கியது. 

பலூனில் இணைக்கப்பட்ட 4 கே கேமராக்கள் இதை பல்வேறு கோணங்களில் படம் எடுத்துள்ளன. இதில் பூமியின் வளிமண்டலத்தின் விளிம்பில் கோப்பை அமர்ந்திருப்பது போன்ற சில காட்சிகள் பிரம்மிக்க வைப்பதாக இருந்தன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு