கிளிநொச்சி மாவட்ட பிரதேசசபை உறுப்பினா்கள் சுற்றுப்பணயம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்ட பிரதேசசபை உறுப்பினா்கள் சுற்றுப்பணயம்..

கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளில் தேர்வான உறுப்பினர்கள் உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நுவரேலியா மாவட்டத்திற்கான சுற்றுப் பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி , பச்சிளைப்பள்ளி , பூநகரி ஆகியவறில் கடந்த பெப்ரவரி மாதம் 10ம் திகதி இடம்பெற்ற தேர்தலின் மூலம் தேர்வான உறுப்பினர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குழுவே 

குறித்த கள  சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு சென்ற குழுவில் 3 சபைகளின் சகல கட்சிகளில்  இருந்தும் மொத்தமாக 45 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பயணத்தின்போது நுவரேலியாவில் ஓர் பயிற்சிப் பட்டறையுடன் நுவரேலியா மாவட்ட மாநகர சபை உள்ளிட்ட இடங்களின் முகாமைத்துவம் உள்ளிட்டவை தொடர்பிலும் நேரில் சென்று பார்வையிட்டனர். 

திணைக்களத்தின் செலவில் இடம்பெற்ற சுற்றுப்பயணமானது இரு நாள் திட்டத்தின் அடிப்படையில் இடம்பெற்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு