யாழ்.வெற்றிலைக்கேணியில் கடற்படை அதிரடி! 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.வெற்றிலைக்கேணியில் கடற்படை அதிரடி! 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு...

யாழ்.வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் 42 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர்.

கடற்படையினரால் நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 128 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரளா கஞ்சா கடலில் சிக்கியது.

விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான 04 சாக்கு மூட்டைகளை மீட்டுள்ளதுடன் அதில் இருந்து 53 பார்சல்களில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 128 கிலோ 100 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா இருந்தது.

தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகள் காரணமாக, கேரள கஞ்சாவை நாட்டிற்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்கள் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு  42 மில்லியன் ரூபாய் என கருதப்படுகிறது.

கேரள கஞ்சாவை மேலதிக நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு