SuperTopAds

வன விலங்குகளால் உண்டாகும் பாதிப்புக்களை தடுக்க வன ஜீவராசிகள் திணைக்களம் வடக்கில் இல்லாமை வேதனைக்குாியது..

ஆசிரியர் - Editor I
வன விலங்குகளால் உண்டாகும் பாதிப்புக்களை தடுக்க வன ஜீவராசிகள் திணைக்களம் வடக்கில் இல்லாமை வேதனைக்குாியது..

வடக்கில் வன விலங்குகளால் ஏதும் ஆபத்து நிகழ்ந்தால் அதனை கட்டுப்படுத்த அநுராதபுரத்தில் இருந்தே ஆட்கள் வரவேண்டும் என்ற நிலமையினையே மத்திய அரசு வைத்திருப்பது வேதனைக்குரியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

வடக்கில் 4 மாவட்டங்களில் அதிக வனப்பகுதிகள் உள்ளன. இதில் வரும் வருமானத்தினை மட்டுமன்றி மக்கள் இடம்பெயர்வால் ஏட்பட்ட சிறு பற்றைகளையும் தமது சொந்தம் என வளைத்துப்போடும் பணியில் வனவளத் திணைக்களமும் வன ஜீவராசிகள் திணைக்களமும் ஈடுபடுவதில் மட்டும் குறியாகவுள்ளனர். 

ஆனாலும் அந்த மாவட்டத்தில் வன ஜீவராசிகளால் ஏதும் ஆபத்து என அறிவித்தால் மக்களோடு மக்களாக வேடிக்கை பார்க்கவே வருகின்றனர். குறைந்த பட்சம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் உள்ள வலைகூடக் கிடையாது வெறும் கையுடனேயே வருகின்றனர். 

இந்த நிலமையே நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை 7 மணிமுதல் அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம் பாடசாலைக்கு சமீபமாக சிறுத்தைப் புலி நுழைந்துவிட்டதாள் இருவர்மீது கடித்து விட்டது எனவும் திணைக்களங்களிற்கு அறிவிக்கப்பட்டது. 

சம்பவ இடங்களிற்கு திணைக்களத்தினர் சமூகமளித்தனர். இருப்பினும் அந்த சிறுத்தைகளைப் பிடிப்பதற்கான எந்தவொரு உபகரணமும் அவர்களிடம் இல்லை.

இது தொடர்பில் கேள்வி எருப்பியபோது இவற்றினை பிடிப்பதானால் அதற்குப் பயிற்றப்பட்டவர்கள் அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்தே வரவேண்டும். எனப்பதில் வழங்கப்படுகின்றது. அவ்வாறானால் வடக்கில் உள்ள வன ஜீவராசிகள் திணைக்களம் அங்கே என்ன செய்கின்றனர். 

அந்த மாவட்டங்களின் வளத்தை சுரண்டுவது மட்டும்தான் உங்கள் பணியா என்ற ஐயம் ஏற்படுகின்றது. வனப் பகுதிக்குள் மக்கள் சென்றால் துவக்கை காட்டி அச்சுறுத்தும் வனவளத் திணைக்களத்தினர் இவ்வாறான அசம்பாவிதங்களின்போது அது தமது படி இல்லை என்கின்றனர். 

இவற்றினையே நாம் நீண்ட காலமாக கூறிவந்த நிலையில் குறித்த அமைச்சுக்கள் மறுத்து வந்தனர். தற்போது நேற்றைய தினம் சிறுத்தையால் கடியுண்ட குடும்பங்களிற்கும் குறித்த திணைக்களமே உடனடியாக இழப்பீடுகளை வழங்குவதோடு 

இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டால் உடனடியாக செயல்படக்கூடிய பயிற்றப்பட்டவர்களையும் அதற்கான உபகரணங்களையும் உடன் வடக்கின் அணைத்து மாவட்டங்களிற்கும் வழங்க வேண்டும். என்றார்.