நிதியில்லாமல் திண்டாடுகின்றது வடமாகாணசபை!

ஆசிரியர் - Admin
நிதியில்லாமல் திண்டாடுகின்றது வடமாகாணசபை!

வடமாகாணவபைக்கான சுமார் 1300 மில்லியன் நிதியை இவ்வாண்டினில் இதுவரை விடுவிக்காது மத்திய அரசு காட்டிவரும் அசமந்த போக்கினை கண்டித்து வடக்கு முதலமைச்சர் கடிதமெழுதியுள்ளார்.

வடமாகாணசபையினது நிதியான 500 மில்லியனையும் அதேபோன்று ஒப்பந்தகாரர்களிற்கு கொடுப்பனவு செய்யவேண்டிய 800 மில்லியனுமாக ஆயிரத்து 300 மில்லியன் நிதியை மத்திய திறைசேரி விடுவிக்காதுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் முறையிட்டுள்ள முதலமைச்சர் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இது குறித்து பேசவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வடமாகாணசபை ஒதுக்கப்படும் நிதியை செலவு செய்யாது திருப்பி அனுப்பிவைப்பதாக பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வந்த போதும் அதிகாரிகள் அதனை மறுத்தே வந்திருந்தனர்.

தற்போது வருடத்தின் இறுதி மாதமான மார்கழி மாதத்தில் ஆயிரத்து 300 மில்லியன் நிதிவரை மத்திய திறைசேரி விடுவிக்காமையால் பாரிய நிதி நெருக்கடி எதிர்கொள்ளப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஒப்பந்தகாரர்களிற்கான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படாமையினை காரணங்காட்டி பல கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு