12 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மாநகரசபை பணி கட்டுப்பாட்டாளர் கைது!
12 வயதான சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மாநகர சபை பணி கட்டுப்பாட்டாளர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் நேற்று (29) பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பணிக் கட்டுப்பாட்டாளர் தம்புள்ளை மாநகர சபையின் முன்னாள் மேயரின் சகோதரர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய பணி கட்டுப்பாட்டாளர் கடந்த வருடம் பல சந்தர்ப்பங்களில் குறித்த சிறுவனை துஷ்பிரயோகத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிவித்தலுக்கு அமைய தம்புள்ளை பொலிஸார் சந்தேகநபரின் வீடு மற்றும் பணியிடங்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல தடவைகள் சென்ற போதும் அவர் அப்பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
இதன்படி, சந்தேகநபர் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்ச்சியாக செய்தி பரப்பிய நிலையில் சந்தேகத்திற்குரிய கட்டுப்பாட்டாளர் தம்புள்ளை பொலிஸில் சரணடைந்துள்ளார்.
தம்புள்ளை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிலுகா விஜேசுந்தர மற்றும் பொலிஸ் குழுவினர்
12 வயதுடைய சிறுவனின் வாக்குமூலத்தை பதிவு செய்து, சிறுவனை வைத்தியரிடம் ஆஜர்படுத்திய பின்னர் சந்தேக நபரை தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.
சந்தேகத்திற்குரிய பணிக் கட்டுப்பாட்டாளர் முன்பு இதேபோன்ற சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டார் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.