SuperTopAds

அரிசியை விட சிறிய கணினியை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆசிரியர் - Editor II
அரிசியை விட சிறிய கணினியை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

அரிசியை விட சிறிய அளவிலான உலகத்தின் மிகச் சிறியை கணினியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், உலகின் மிகச் சிறிய கணினியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

அரிசியை விட சிறிய அளவிலான இந்தக் கணினியின், வெறும் 0.3 மில்லி மீற்றர் அளவிலானது. இந்தக் கணினியைக் கொண்டு புற்றுநோயை கண்டறியவும், அதன்மூலம் சிகிச்சை அளிக்கவும் முடியும்.

அத்துடன் எண்ணெய் வித்துக்களின் இருப்பிடங்களை கண்டறியவும், கண்ணில் ஏற்படும் க்ளாகோமா (பசும்படலம்) நோயின் அழுத்தத்தை அறியவும், சிறிய ரக நத்தைகள் தொடர்பாக ஆராயவும்,உயிர்வேதியியல் செயல்முறைகளை கண்காணிக்கவும் பயன்படுகிறது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தக் கணினியை கண்டுபிடித்துள்ளதால், இதற்கு மிச்சிகன் மைக்ரோ மோட் என பெயரிடப்பட்டுள்ளது