தவறை ஏற்றார் முல்லைதீவு வலயக் கல்விப் பணிப்பாளர்..! ஆசிரியரின் சம்பளத்தை மீள செலுத்த ஒப்புதல்...

ஆசிரியர் - Editor I
தவறை ஏற்றார் முல்லைதீவு வலயக் கல்விப் பணிப்பாளர்..! ஆசிரியரின் சம்பளத்தை மீள செலுத்த ஒப்புதல்...

முல்லைத்தீவு வலய பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு உழைக்கும்போதான வரி அறவீட்டில் தவறு இடம்பெற்றமையை ஏற்றுக் கொள்வதாக முல்லத்தீவு வலயக் கல்வி பணிப்பாளர் தமிழ்மாறன் முறைப்பாட்டாளரான ஆசிரியருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உழைக்கும்போது அறவிடப்படும் ஆசிரியர்களுக்கான வரி அறவீட்டில் சுற்று நிருபங்களை உரிய முறையில் பின்பற்றாமல் தனது மாதாந்த ஊதியத்தில் வரி கழிக்கப்பட்டமை தொடர்பில் ஆசிரியரால் 2 வருடங்களுக்கு முன் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

எனினும் ஆசிரியரின் முறைப்பாட்டை கண்டுகொள்ளாத வலயக் கல்விப் பணிப்பாளரின் செயற்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியரினால் முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு வலையக்கல்விப் பணிப்பாளரை குறைத்த முறைபாட்டு தொடர்பில் பதில் வழங்கவருமாறு திகதியிட்டு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் முல்லைத்தீவு வலைய உதவிக் கல்விப் பணிப்பாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில் குறித்த ஆசிரியரின் வரி அறவீட்டில் தவறு நடந்ததை ஒத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் முறைப்பாட்டாளரான ஆசிரியருக்கு உழைக்கும் பொது வரி அறவீட்டில் கழிக்கப்பட்ட பணத்தை மீள பெறுவதற்குரிய காசோலையை வழங்குமாறு முல்லைத்தீவு வலையக்கல்விப் பணிப்பாளர் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு