உண்மை நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேசப் பொறிமுறையாக இருக்க வேண்டும்!

ஆசிரியர் - Admin
உண்மை நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேசப் பொறிமுறையாக இருக்க வேண்டும்!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச பொறிமுறையாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றத்தை நாடியமை மகிழ்ச்சியானதே. சிங்கப்பூர் நீதிமன்றம் பக்கசார்பின்றி முடிவை வழங்கும்.

ஆனால் கடந்த 14 வருடங்களாக தமிழ் மக்கள் நீதிக்காக காத்திருக்கின்றனர். உள்ளகப் பொறிமுறையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவேதான் சர்வதேச நீதிமன்ற பொறிமுறையை தொடர்ந்தும் வலியுறுத்துகின்றனர்.

இதனை முதலில் அரசாங்கம் தொடர்ந்தும் மறுக்கின்றது. நாங்கள் சர்வதேசம் செல்லத் தயாரில்லை எனவும், உள்நாட்டு பொறிமுறை ஊடாக தீர்வு வழங்குவதாக கூறிவருகின்றது. இதுவே இந்த அரசாங்கத்தின் உண்மையான இனவாத முகம்.” என கூறினார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு