SuperTopAds

அசூர வேகத்தில் தாக்கவுள்ள மோச்சா புயல்!! -தமிழகத்தை நெருங்கும் பெரும் ஆபத்து-

ஆசிரியர் - Editor II
அசூர வேகத்தில் தாக்கவுள்ள மோச்சா புயல்!! -தமிழகத்தை நெருங்கும் பெரும் ஆபத்து-

வங்க கடலில் பகுதியில் உருவாகியுள்ள மோச்சோ புயல், அடுத்த இரு நாட்களுக்கு எந்த பகுதிகளை பாதிக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 7 ஆம் திகதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

மோச்சா என அழைக்கப்படும் இப்புயல் வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மோச்சோ புயல் மத்திய வங்கக்கடலில் உருவாகி இருப்பதால், புயல் உருவாவது உறுதியாகிவிட்டது. மேலும் இப்புயல் தமிழகத்தை பெரிதாக பாதிக்காது என்றாலும் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேர கனமழை பொழியுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள தாழ்வான காற்றழுத்தம் உண்டாகியிருக்கும் நிலையில், இதன் பயணத்தை கணிக்க முடியாது என்றாலும் ஒடிசாவில் பெரும்பாலும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஒடிசா அல்லது ஆந்திர பிரதேசம் இடையே எங்காவது ஓரிடத்தில் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் வடக்கு ஆந்திர பகுதி அதிகமாக இதனால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் பனி மொழி பொழிந்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு அறிக்கையில் கடலோர பகுதியில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாமென அறிவித்துள்ளனர்.