இ.போ.ச பேருந்துகள் மாணவர்களை ஏற்றாது சென்றது உண்மைதான்! சாரதி/ நடத்துனர் மீது நடவடிக்கை, மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இ.போ.ச உறுதியளிப்பு..

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பேருந்துகள் மாணவர்களை ஏற்றாது சென்றது உண்மைதான்! சாரதி/ நடத்துனர் மீது நடவடிக்கை, மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இ.போ.ச உறுதியளிப்பு..

முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி லயத்திற்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த மாணவர்களை A9 வீதியில் பயணிக்கும் இ.போ.ச  பேருந்துகள் ஏற்றிச்செல்லாமை தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

அதனை அடிப்படையாக கொண்டு 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டம் பிரிவு 14 இன் பிரகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்தப்பிரேரணையாக மேற்படி விடயத்தை எடுத்துக்கொண்டது. 

இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் தொடச்சியாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையின் இன்று புதன்கிழமை இ.போ.ச வடபிராந்தியத்தின் பதில் பிராந்திய முகாமையாளர் செயலாற்றல் முகாமையாளர் AJ லெம்பேட என்பவரை, 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தது. இக்கலந்துரையாடலின் பின்வரும் விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதாக 

இ.போ.ச வடபிராந்திய செயலாற்றல் முகாமையாளரால் ஆணைக்குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.202305.02 ஆம் நிகதி நமது தலைமையினான குழுவினர் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் 

அதன் பிராகாரம் இ.போ.ச வடபிராந்தியத்தின் கீழ் இயங்கும் சாலைக்குட்பட்ட பேருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்றமை தமது குழுவினரால் கண்டறியப்பட்டது. அந்த பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் 

வெளி மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த பேருந்தும் இவ்வாறு பாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்றமை கண்டறியப்பட்டு இ.போ, சபையின் தலைவருக்கு அறிக்கையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இ.போ சபையின் தலைவரது ஒத்துழைப்பும் தமக்கு கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும் குறித்த வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் பேருத்துகள் மாணவர்களை ஏற்று இறக்குதல் தொடர்பில் 

காரைநகர் சாலை ஊழியர்களுக்கு தமது பயிற்சி பாடசாலையினால் பயிற்சிகள் வழங்கபட்டுள்ளதாகவும் செயலாற்றல் விளக்கமளிக்கப்பட்டது. பரந்தனிலிருந்து மாங்குளம் வரை பாடசாலை சேவையை ஆரம்பிப்பதற்கு 

இ.போ.சபையின் கிளிநொச்சி சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுளைதாவும், இருப்பினும் நடத்தரர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி பற்றாக்குறை நிலவுவதனால் எதிர்காலத்தில் சாரதிகள் நியமிககப்பட்டவுடன் 

பாடசாலை சேவை ஒன்று பரந்தன் - மாங்குளம் இடையில் ஆரம்பிக்கப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உறுதியளிக்கபட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு