வீடு புகுந்த கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட பூசகர்! பெருமளவு நகை, பணம் கொள்ளை...

ஆசிரியர் - Editor I
வீடு புகுந்த கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட பூசகர்! பெருமளவு நகை, பணம் கொள்ளை...

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் வீடு புகுந்த மர்ம நபர்களால் 69 வயதான முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

குறித்த வீட்டில் மனைவி மற்றும் உறவினரான யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்தவரும் என மூவரும் உறங்கிக் கொண்டிருந்தவேளை வீட்டின் ஜன்னலை பிரித்த கொள்ளையர்கள் யன்னல் கம்பியினைப் உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

இதன்போது உறங்கிக் கொண்டிருந்த வயதான நண்பரையும் மனைவியினையும் கை, கால் மற்றும் வாயை கட்டிய கொள்ளையர்கள் மரண கிரியைகள் மற்றும் வீட்டு கிரியைகளை நடத்தும் 69 வயதான முதியவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதனையடுத்து வீட்டில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளை இட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலிருந்த மனைவி மற்றும் உறவினர் ஆகியோர் அதிகாலையில் கை, கால் கட்டுகளை அவிழ்த்து விட்டு வெளியில் வந்து பார்த்தபோது ஐயர் நிலத்தில் குப்பற விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.  

அச்சமடைந்த இருவரும் வீட்டிற்கு முன்னால் உள்ள கடை ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள் கடைக்காரர்கள் பொலிஸாருக்கு கவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருக தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், 

தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த ஐயரின் மனைவி மற்றும் மனைவியின் உறவினரான ஒருவரும் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டனர்.

 சம்பவ இடத்திற்கு மேப்பநாய் வரவளைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார். 

உடலம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் இது தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு