பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவு விஷமானதால் 31 மாணவர்கள் வைத்தியசாலையில்...

ஆசிரியர் - Editor I
பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவு விஷமானதால் 31 மாணவர்கள் வைத்தியசாலையில்...

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவு விஷமானதால் 31 பாடசாலை மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நானுஓயா - கிளாசோ பிரதேச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பாடசாலையில் 3ம், 4ம், 5ம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலை தொடர்ச்சியாக உணவு வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 

பகல் உணவினை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம், வயிற்று வலி, வயிற்றோட்டம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உணவருந்தியவர்களில் சுமார் 31 மாணவர்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக, 105 மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 31 மாணவர்கள் வயிற்றுவலிக்கு உள்ளானதை தொடர்ந்து 

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார். அதனையடுத்து, பாடசாலை மாணவர்கள் உட்கொண்ட உணவின் பகுதிகளையும் 

மாதிரிகளையும் பரிசோதனைக்காக நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு