SuperTopAds

இலங்கைக்கு வரலாற்று வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்தார் துஷேன் சில்வா

ஆசிரியர் - Editor II
இலங்கைக்கு வரலாற்று வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்தார் துஷேன் சில்வா

ஸ்பெகிஸ்தானில் நடந்து வரும் 5 ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கையைப் பிரதிநிதித்ததுவப்படுத்தி பங்குகொண்ட நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர் துஷேன் சில்வா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.70 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை அவர் சுவீகரித்துள்ளார்.

இதன்மூலம் 72 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டு விழாவொன்றில் இலங்கை சார்பில் கோலூன்றிப் பாய்தலில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார். 

இதற்முன் 1951இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் கோலூன்றிப் பாய்தலில் முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்ற வீரராக எம்.ஏ அக்பர் இடம்பிடித்திருந்தார்.

அத்துடன், குறித்த போட்டியில் தனது தனிப்பட்ட அதிசிறந்த உயரத்தை தாவிய அவர், இளையோர் தேசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.

இருப்பினும் இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் முதல் தடவையாக கோலூன்றிப் பாய்தல் போட்டி நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.