உடைத்த விக்கிரகங்களை மீள நிறுவுவதற்கு நீதிமன்றம் உத்தரவு, வழிபாடு நடத்தவும் அனுமதி... வெடுக்குநாறி ஆக்கிரமிப்புக்கு எதிராக சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
உடைத்த விக்கிரகங்களை மீள நிறுவுவதற்கு நீதிமன்றம் உத்தரவு, வழிபாடு நடத்தவும் அனுமதி... வெடுக்குநாறி ஆக்கிரமிப்புக்கு எதிராக சுமந்திரன்..

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஷ்வரர் ஆலயத்தில் உடைக்கப்பட்ட கடவுள் விக்கிரகங்களை மீளவும் அதே இடத்தில் அமைப்பதற்கு வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, 

ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், பொலிஸ் நிலையத்தில் உள்ள விக்கிரகங்கள் அனைத்தும் பூசாரியிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

அங்கு பூசை வழிபாடுகள் அனைத்தும் செய்ய முடியும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொல்பொருள் திணைக்களத்தினர் எந்த தடையும் எற்படுத்த முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு