முல்லைத்தீவு மாவட்டத்தில் 8606.02 ஹெக்ரயர் அளவிலான நிலம் மற்றும் ஆறுகள் பறிபோகிறது..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தில் 8606.02 ஹெக்ரயர் அளவிலான நிலம் மற்றும் ஆறுகள் பறிபோகிறது..

முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் மற்றும் வட்டுவாகல் பகுதிகள் மட்டுமல்லாமல் நாயாறு பகுதியையும் உள்ளடக்கி சுமார் 8 ஆயிரத்து 606.02 ஹெக்ரயர் நீர் நிலைப்பகுதி மற்றும் நிலப்பகுதியை இயற்றை ஒதுக்கிடமாக அடையாளப்படுத்தி வன ஜீவராசிகள் திணைக்களத் தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியிருக்கின்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் மீனவர்களுடைய வாழ்வாதர தொழிலுக்கான அடிப்படையாக உள்ள நந்திக்கடல் மற்றும் வட்டுவாகல் நீர் நிலைப்பகுதிகளையும், அதனை சூழவுள்ள பகுதிகளையும் உள்ளட க்கியதாக சுமார் 4 ஆயிரத்து 141.67 ஹெக்ரயர் நிலப்பகுதியை வன ஜீவராசிகள் திணைக்களம் 

தமது ஆளுகைக்குள் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந் தது. இதேபோல் நாயாறு நீர் நிலைப்பகுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளையும் உள்ள டக்கியதாக 4 ஆயிரத்து 464.35 ஹெக்ரயர் நிலப்பகுதியையும் வன ஜீவராசிகள் திணைக்கள ம் தனது ஆளுகைக்குள் கொண்டுவரவுள்ளது. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 

8 ஆயிரத்து 606.02 ஹெக்ரயர் அளவிலான பகுதியை வன ஜீவராசிகள் பாதுகாப்பு திi ணக்களத்தின் கீழ் கொண்டுவர முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் நந்திக்கடல், வட்டுவாகல், நாயாறு நீர் நிலைப்பகுதிகள் மட்டுமல்லாமல் இவற்றை சூழவுள்ள வயல் நிலங்கள், மக்களு டைய குடியிருப்புக்கள், மீனவர்களுடைய தொழில் செய்யும் இடங்களும் வன ஜீவராசிகள் 

திணைக்களத்தின் ஆளுகைக்குள் செல்லவுள்ளது. மேலும் மேற்படி 8 ஆயிரத்து 606.02 ஹெ க்ரயர் நிலமும் இயற்கை ஒதுக்கிடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மேற்படி ப குதிகளில் மக்கள் நடமாட முடியாத நிலை உருவாக்கப்படும். இதனால் வட்டுவாகல், நந்திக்க டல், மற்றும் நாயாறு பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் மோசமாக பாதிக்கப்படும் 

அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில் மேற்படி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வர்த் தமானி அறிவித்தல் இதுவரையில் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தமை எதற்காக? என வடமா காணசபையிலும், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் கேள்வி எழுப்ப வுள்ளதாக ரவிகரன் மேலும் கூறியிருக்கின்றார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு