நடிகர் சரத்பாபு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில்

ஆசிரியர் - Editor II
நடிகர் சரத்பாபு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சரத்பாபு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்பாபு, 1973 ஆம் ஆண்டு தெலுங்கில் ராம ராஜ்ஜியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து பட்டின பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

நடிகர் சூபஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான சரத் பாபு, அண்ணாமலை, முள்ளும் மலரும், முத்து போன்ற படங்களில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக சரத்பாபு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் உடல் நலம் சற்று தேறிய நிலையில், மீண்டும் மோசமடையவே தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உடல் உறுப்புகள் நோய் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 20ம் தேதி முதல் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு