SuperTopAds

நடிகர் திலகம் சிவாஜி வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் அவமரியாதை செய்யப்பட்ட யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள்! அசிங்கமாக நடந்துகொண்ட பெண்...

ஆசிரியர் - Editor I
நடிகர் திலகம் சிவாஜி வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் அவமரியாதை செய்யப்பட்ட யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள்! அசிங்கமாக நடந்துகொண்ட பெண்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் தன்னை நிகழ்வு ஏற்பாட்டாளர் என அடையாளப்படுத்திய பெண் ஒருவர் ஊடகங்களை சபையில் இருந்து வெளியேறுமாறு கூச்சலிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்ட நிலையில் திடீரென அங்கு நின்ற பெண் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு அதிகார தொனியில் மிக அநாகரீகமாக நடந்து கொண்டார்.

இந்நிலையில் சில ஊடகவியலாளர்கள் நாங்கள் அடையாள அட்டையை காட்டுவதில் பிரச்சனையில்லை நீங்கள் யார் என்பதை முதலில் கூற முடியுமா என கேள்வி எழுப்ப நீங்கள் வெளியேறலாம் என குறித்த பெண்மணி கடுந்தொனியில் கத்தினார்.

இவை அனைத்தையும் நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்கள் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்த நிலையில் சபையிலிருந்த 10க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் சபையிலிருந்து வெளியேறினர்.

அதன் பின் ஏற்பாட்டாளர்கள்  சிலர் ஊடகவியலாளர்களை அணுகி நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியதுடன் சாட்டுப்போக்கான காரணங்களை கூறி நிகழ்வுக்கு வருமாறு கூறினர். எனினும் ஊடகவியலாளர்கள் சபையிலிருந்து வெளியேறிவிட்டனர்.