SuperTopAds

யாழ்.நெடுந்தீவு கூட்டுப் படுகொலை சம்பவம் புங்குடுதீவை சேர்ந்த ஒருவர் பொலிஸாரின் விசாரணைப் பிடிக்குள்! 3 பொலிஸ் குழுக்கள் களத்தில் அதிதீவிர விசாரணை தொடர்கிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கூட்டுப் படுகொலை சம்பவம் புங்குடுதீவை சேர்ந்த ஒருவர் பொலிஸாரின் விசாரணைப் பிடிக்குள்! 3 பொலிஸ் குழுக்கள் களத்தில் அதிதீவிர விசாரணை தொடர்கிறது..

யாழ்.நெடுந்தீவில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலை சம்பவம் தொடர்பில் புங்குடுதீவை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொிவிக்கின்றன. 

நேற்றைய தினம் நெடுந்தீவு இறங்குதுறைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 3 பெண்களும், இரு ஆண்களும் மிலேச்சை தனமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ்

3 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு மிக தீவிரமான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று நெடுந்தீவிலிருந்து வெளியேறியதாக நெடுந்தீவில் உள்ள பொது அமைப்பு ஒன்று 

பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும், அந்த தகவலின் அடிப்படையில் புங்குடுதீவை சேர்ந்த வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்ட ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. 

புங்குடுதீவை சேர்ந்த நபர் நெடுந்தீவில் உள்ள முதியவர் வீட்டிற்கு வந்து சென்றதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு  இரகசிய தகவல் கிடைத்ததாகவும் அதனையும் அடிப்படையாக கொண்டே குறித்த நபரிடம் விசாரணை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 

எனினும் இந்த தகவல்களை பொலிஸார் உத்தியோகபூர்வமாக இதுவரை வெளியிடவில்லை.