யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், பரிசோதனைகளை செய்யவேண்டாம் என சுற்றறிக்கையாம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், பரிசோதனைகளை செய்யவேண்டாம் என சுற்றறிக்கையாம்...

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், எழுமாற்று பரிசோதனைகளை செய்யவேண்டாம். என சுற்றறிக்கை வெளியிட்ப்பட்டுள்ளதாம். 

மாவட்டத்தில் அண்மையில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. 

இந்நிலையில் கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் கொவிட் பரிசோதனைகளை செய்ய வேண்டாம் என்ற அறிவுறுத்தல் சுகாதாரத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமும் யாழ்.போதனை வைத்தியசாலைக்கு சில அறிகுறிகளுடன் நோயாளர்கள் வருகைதரும் நிலையில் கொவிட் தொற்று அதிகளவில் பரவி இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

ஆகவே அறிகுறிகள் தென்படும் நிலையில் பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு