திருமணம் ஆகாத இலியானா கர்ப்பம்? -குழப்பத்தில் ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
திருமணம் ஆகாத இலியானா கர்ப்பம்? -குழப்பத்தில் ரசிகர்கள்-

தளபதி விஜயுடன் நடித்து பிரபலமான இலியானா தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நண்பன் படத்தில் இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாடலுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை கவர்ந்த இலியானா, அதன்பின்னர் உடல் எடை கூடி இருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இலியானா, தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படம் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அதில், விரைவில், என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டு, சாதனை பயணம் ஆரம்பித்து விட்டது என்ற பொருள் அடங்கிய வாசகம் இடம்பெற்ற குழந்தையின் உடையையும் வெளியிட்டுள்ளார்.

அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், தனது காதலர் யாரென்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை என்பதால் பலரும் குழப்பத்தில் உள்ளனர். இலியானாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு