இனி மொபைல் டேட்டாவே தேவையில்லை: கூகுள் க்ரோம் அதிரடி

ஆசிரியர் - Editor II
இனி மொபைல் டேட்டாவே தேவையில்லை: கூகுள் க்ரோம் அதிரடி

இனி இண்டர்நெட் இல்லாவிட்டாலும் ப்ரவ்சிங் செய்யும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. 

பொதுவாக மொபைல் டேட்டா ஆன் செய்தால் மட்டுமே இண்டர்நெட் மூலம் செர்ச் செய்ய முடியும். அவ்வாறு ப்ரவுசிங் செய்கையில், நமக்கு தேவையான இணைய பக்கங்களை பதிவிறக்கம் செய்து கொண்டு, அதனை இண்டெர்நெட் இல்லாத சமயங்களில் பார்க்க முடியும். 

இந்நிலையில், கூகுள் க்ரோம் ப்ரவுசரில் ஆட்டோமெட்டிக்காக நாம் சர்ச் செய்யும் பக்கங்களை பதவிறக்கும் செய்யும் புதிய அப்டேட் வந்துள்ளது. இதன் மூலம் இனி மொபைல் டேட்டா இல்லாவிட்டாலும், நாம் பார்த்த பக்கங்களை மீண்டும் பார்க்க இயலும். 

இந்த புதிய வசதியை பெறுவதற்கு, உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள கூகுள் க்ரோமை அப்டேட் செய்தாலே போதுமானது. கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று, கூகுள் க்ரோம் என்று டைப் செய்தால், அதில் அப்டேட் என்ற ஒரு ஆப்சன் வரும். அதன் மூலம் நீங்கள் உங்கள் க்ரோம் ப்ரவுசரை அப்டேட் செய்து கொள்ளலாம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு