SuperTopAds

தொற்றுநோய் தாக்கம் முற்றாக கட்டுப்படுத்தப்படும்வரை வடமாகாணத்தில் மாட்டு இறைச்சி விநியோகத்திற்கான தடை தொடரும்!

ஆசிரியர் - Editor I
தொற்றுநோய் தாக்கம் முற்றாக கட்டுப்படுத்தப்படும்வரை வடமாகாணத்தில் மாட்டு இறைச்சி விநியோகத்திற்கான தடை தொடரும்!

வடமாகாணத்தில் மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் கழலை நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்பே மாட்டு இறைச்சி விநியோகத்திற்கு அனுமதிக்கப்படும் என வடமாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் கூறியுள்ளார். 

வடமாகாணத்தில் மாடுகளுக்கு ஏற்பட்ட கழலை நோய் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் மாடுகளுக்கு கழலை நோய் பரவல் ஏற்பட்டு தற்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதும் சில மாவட்டங்களில் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நோய் தொற்றை கட்டுப்படுத்துவது சற்று சவாலான விடையமாகக் காணப்படுகின்ற நிலையில் தொடர்ச்சியாகக் கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

மற்றைய மாவட்டங்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்காக மாவட்டங்களுக்கு இடையிலான மாற்றச்சி விநியோகத்தை ஏற்கனவே தடை செய்துள்ளோம். ஆகவே மாவட்டங்களுக்கு இடையிலான மாட்டு இறைச்சிக்கு விநியோத்திற்கு

தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடைமுறை மறு அறிவித்தல் கிடைக்கப் பொறும் வரை நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.