யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலத்தின் பின் கொரோனா தொற்றுடன் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்!!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலத்தின் பின் கொரோனா தொற்றுடன் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்!!

யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த பெண் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. 

3 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட எழுமாற்றான கொவிட் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சி.யமுனானந்தா கூறியுள்ளார். 

மேலும் பாதிக்கப்பட்ட பெண் வேறு தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர் எனவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் எனவும், கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர் எனவும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை யாழ்ப்பாண மக்கள் அல்லது வடமாகாண மக்கள் கொரோனா பரவல் தொடர்பாக பீதியடையவேண்டாம் எனவும், கொவிட் தொற்று இன்றும் சமூக மட்டத்தில் மிக குறைந்தளவில் உள்ளபோதும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களே 

அதனால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வயோதிபர்கள் கொவிட் தொடர்பாக எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறந்தது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு