7 குளங்களை காணவில்லை!! -வடிவேல் பாணியில் போராட்டம் நடத்தி அதிகாரிகளை அதிர வைத்த நபர்-

ஆசிரியர் - Editor II
7 குளங்களை காணவில்லை!! -வடிவேல் பாணியில் போராட்டம் நடத்தி அதிகாரிகளை அதிர வைத்த நபர்-

வைகைப்புயல் வடிவேல் திரைப்படம் ஒன்றில் கிணற்றை காணவில்லை என்று பொலிஸாரிடம் முறையிட்டதைப் போன்று இந்தியாவின் பொன்னேரி அருகே பயன்பாட்டில் இருந்த 7 குளத்தை காணவில்லை என்று தொழிலாளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரி அருகே உள்ள பூதூர் ஊராட்சியில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதேபகுதியில் தேனீர்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாட்டு மனு கொடுத்தார்.

அனால் குளத்தை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிiலியல் அவர் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வழக்கம்போல் மாயமான 7 குளத்தை மீட்க வேண்டும் என்ற அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால் இதனை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ள வில்லை. இதையடுத்து அவர் பூதூரில் 7 குளங்களை காணவில்லை என்று கையில் பதாகை ஏந்தியவாறு அந்த அலுவலக நுழைவாயிலின் முன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அந்த பதாகையில் குளத்தின் பதிவு இலக்கத்தையும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சிவக்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு