SuperTopAds

இணுவில் பொதுநூலகம் மற்றும் சன சமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும்..

ஆசிரியர் - Editor I
இணுவில் பொதுநூலகம் மற்றும் சன சமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும்..

இனுவில் பொது நூலகம் மற்றும் சன சமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இனுவில் நூல் நிலைய கலாசார மண்டபத்தில் தலைவர் சிவலிங்கம் புரந்தரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர் திரு பொ.ரவிச்சந்திரன் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக பிரதி நூலகர் கலாநிதி கல்பனா சந்திரசேகர், ஜே 188 இணுவில் மேற்கு கிராம சேவகர் இ.ரமேஷ் ஆகியோரும்,


சிறப்பு விருந்தினர்களாக கனடாவாழ் இ.சச்சிதானந்தம், ஜ.பரமேஸ்வரன், ஜ.திவாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள். அமரர் பொன்னையா கனகம்மா அவர்களின் அனுசரணையில் நடந்த இந்நிகழ்வில்ஆசியுரையை புகழ் பூத்த ஆசிரியரும் நூல் நிலையத்தின் போசாகருமாகிய திரு இரா. அருட்செல்வம் அவர்கள் வழங்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து தலைமையுரையும் விருந்தினர் உரைகளும் இடம் பெற்றது. சமூக நலத்திட்ட வாழ்வாதார உதவி , புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் மற்றும் இணுவில் பொது நூலக ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்திய துடுப்பாட்ட சுற்று போட்டிக்கான வெற்றி கேடயம் பணப்பரிசல்கள் என்பனவும் 

சதுரங்க போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் வெற்றி கேடயங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன. 39 கிரிக்கெட் அணிகள் பங்கு பற்றிய துடுப்பாட்ட சுற்று போட்டியில் இறுதிப் போட்டியில் ஸ்பேஸ் அணி மற்றும் பாபா அணிகள் மோதி ஸ்பேஸ் அணியானது வெற்றிக்கு கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

நிகழ்வில பிரதான அம்சமாக கனடா அமைப்புக் குழுவினருடைய வாழ்வாதார உதவியாக காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகின்ற வாழ்வாதாரமானது இன்று வழங்கி வைக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் இணுவில் ஸ்ரீ பரராய சேகரப் பிள்ளையார் திருநெறிய தமிழ் மறை கழகத்திற்கான ஊக்குவிப்புத் தொகையும் மற்றும் நலிவுற்ற குடும்பத்திற்காக வாழ்வாதாரமாக தையல் இயந்திரம் ஒன்றும் நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.