இலங்கை வீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறவும், விரைவாக ஓய்வுபெறவும் தெரிவுக்குழுவே காரணம்!! -திசர பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு-

ஆசிரியர் - Editor II
இலங்கை வீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறவும், விரைவாக ஓய்வுபெறவும் தெரிவுக்குழுவே காரணம்!! -திசர பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு-

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவு குழுவிடம் கலந்துரையாட கோரிக்கை விடுத்திருந்திருந்தேன். இருப்பினும் தனக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என இலங்கை அணியின் முன்னாள் வீரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமக்கு இலங்கைக்காக மேலும் சேவையாற்றவேண்டி இருந்ததாகவும், இருப்பினும், தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் காரணமாகவே, உண்மையில் இவ்வாறானதொரு முடிவை எடுக்கவேண்டி ஏற்பட்டது என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போது, தலைமை பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆர்த்தர் இருந்தார். அவரிடமிருந்து அதிகமான விடயங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது.

அணி ஒன்றை தெரிவுசெய்யும்போது, அவர் பிரச்சினை ஒன்று இருந்தது. அப்போதைய காலத்தில், தெரிவுக்குழுவினால் 100 சதவீதம், சரியான 11 பேர் தெரிவு செய்யப்படவில்லை என்ற கருத்தை, அணிக்குள் இருந்தபோது, அறிய முடிந்தது.

அவர்களின் விருப்பத் தெரிவுகள் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். உண்மையில் கூறுவதென்றால், நல்ல வீரர்கள், இதனால்தான் வெளியே சென்றனர்.

தெரிவுக்குழுவில் இருந்த மிகப்பெரிய பின்னடைவுகளே, வீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறவும், விரைவில் ஓய்வுபெறவும் காரணமாய் இருந்ததென தாம் கருதுவதாகவும் திசர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு