தீயணைப்பு அவசர உதவிக்கு பணம் கேட்டது தொடர்பாக விசாரணை!! யாழ்.மாநகர ஆணையாளர் தொிவிப்பு..

ஆசிரியர் - Editor I
தீயணைப்பு அவசர உதவிக்கு பணம் கேட்டது தொடர்பாக விசாரணை!! யாழ்.மாநகர ஆணையாளர் தொிவிப்பு..

யாழ்.மாநகரப் பகுதியில் தீயணைப்புக்காக அவசர உதவி கோரியபோது பணம் செலுத்தினால் மட்டும் வர முடியும் என யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவதாவது, நேற்று சனிக்கிழமை யாழ்.சுண்டுக்குளி பகுதியில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கு யாழ்.மாநகர சபைத் தீயணைப்புப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்ட நிலையில் பணம் கட்டினால் வர முடியும். 

என உத்தியோகத்தர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டதாக எழுந்த கருத்துத் தொடர்பில் ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாநகர சபையின் தீர்மானத்தை அடிப்படையாக வைத்து கட்டண அறவீடு நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலையில் முற்பணம் கட்ட வேண்டிய தேவையில்லை.

இவ்வாறான நிலையில் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தவறான கருத்தை கூறியதாக எனக்கும் தகவல் கிடைத்தது. ஆகவே குறித்த உத்தியோகத்தர் பதிலளித்த விதம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு