வடக்கு கடல் பரப்பில் இடம்பெறும் அத்துமீறிய கடலட்டை பிடித்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீன்வள அமைச்சருடன் பேச்சுவார்த்தை ..

ஆசிரியர் - Editor I
வடக்கு கடல் பரப்பில் இடம்பெறும் அத்துமீறிய கடலட்டை பிடித்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீன்வள அமைச்சருடன் பேச்சுவார்த்தை ..

கடலட்டை பிடிப்பதற்கான ஒழுங்குகளை மீறும் கடற்றொழிலாளா்கள் மீது  நடவடிக்கை எடுப்பதுடன், அவா்களுடைய அனுமதியை இரத்து செய்வதென தமிழ்தே சிய கூட்டமைப்புக்கும் மத்திய கடற்றொழில் அமைச்சருக்குமிடையிலான சந்திப்பின்போது தீா்மானிக்கப்பட்டுள்ளது. 

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் மீன்வள அமைச்சர் விஜித் வியஜமுனி சொய்சா அவர்களை சந்தித்து 

வடக்கில் இடம்பெறும் அத்துமீறிய கடலட்டை பிடிப்பு தொடர்பில் கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் கடலட்டை பிடிப்பதற்கு வழங்கிய அனுமதியில் குறிப்பிடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை

 (அதாவதுஇ இரவில் கடலட்டை பிடித்தல்இ கடலட்டை பிடித்தல் கரையிலிருந்து குறைந்தது  5கி.மீ அப்பாலே இடம்பெறவேண்டும்) உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் கடைப்பிடிப்பதெனவும் இவற்றினை மீறுவோரின் அனுமதியினை இரத்து செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. 

மேலும் அமைச்சர் இது தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு முடிவினை காணும்பொருட்டு வடக்கிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்வார் எனவும் தீர்மானிக்கப்பட்டது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு