யாழ்.மத்திய கல்லுாரியின் கீதத்தை மாற்றவேண்டும்! அமைச்சர் டக்ளஸ் யோசனை..
யாழ்.மத்திய கல்லூரியின் கல்லூரி கீதத்தை அனைவருக்கும் விளங்கும் வகையில் மாற்ற வேண்டும் என கடற்தொழில் அமைச்சரும், யாழ்.மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அங்கு அவர் தெரிவிக்கையில் யாழ்.மதிய கல்லூரியின் கல்லூரிக் கீதத்தை வெளிநாட்டவர்கள் தமக்கேற்ற வகையில் இயற்றியுள்ள நிலையில் அதையே நாம் இன்று வரை பாடிக் கொண்டு வருகிறோம்.
ஒரு பாடசாலை கீதத்தை பாடினால் அதனுடைய அர்த்தம் மற்றவர்களுக்கு விளங்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். கல்லூரி கீதத்தை மாற்ற வேண்டும் என நான் குறிப்பிட்டால் சிலர் அதற்கு எதிரான கருத்துக்களை தெரியக்கூடும்.
நான் எனது மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறேன் ஏனெனில் தற்போதும் வெளிநாட்டவர்கள் இயற்றிய மத்திய கல்லூரியின் கீதத்தை நாம் பாட வேண்டிய அவசியம் இல்லை.
ஆகவே கல்லூரிக்கு தற்போது புதிய அதிபர் வந்திருக்கிறார் பழைய மாணவர்களுடன் கலந்துரையாடி எனது கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.