சைவ ஆலயங்கள் மீதான திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க சட்ட நிபுணர் குழு உருவானது!!

ஆசிரியர் - Editor I
சைவ ஆலயங்கள் மீதான திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க சட்ட நிபுணர் குழு உருவானது!!

வவுனியா வடக்கு - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரங்களை கையாள்வதற்காக சட்டநிபுணர் குழு ஒன்றினை தமிழ் சைவப் பேரவை உருவாக்கியுள்ளது.

வெடுக்குநாறி, குருந்தூர்மலை  ஆதிசிவன்  கோவில்கள் மற்றும் கன்னியா வெந்நீருற்று விவகாரங்கள் நீதிமன்ற வழக்குகளோடு தொடர்புபட்டு 

தங்கள் வசதிக்கு தகுந்த வகையில் அரசினால் பயன்படுத்தப்பட்டும் மீறப்பட்டும் வரும் நிலையில் தமிழ் சைவப் பேரவை முன்னாள் நீதிபதியும் பேரவைத் தலைவருமான வசந்தசேனன் தலைமையில் சட்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் சைவப் பேரவை வெளியிட்ட அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இந்த வழக்குகளுடன் தொடர்புடைய ஆலய நிர்வாகங்கள் மற்றும் சட்டதரணிகளுடன் தொடர்பிலுள்ளவர்கள் மேலதிக தகவல்களை பெற்று தருமாறு வேண்டுகின்றோம்.

அதே நேரம் தன்னார்வலர்களாக மேற்படி சட்ட நிபுணர் குழுவில் இணைய விரும்பும் மேனாள் நீதிபதிகள் சட்டத்தரணிகளை வரவேற்கின்றோம் - என்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு